Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.எஸ் வாக்குகளை பெற்று தான் பினராயி விஜயன் எம்.எல்.ஏ ஆனார்: காங்கிரஸ் கடும் தாக்கு

Mahendran
திங்கள், 22 ஏப்ரல் 2024 (10:22 IST)

கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே பாஜகவை தாக்கி பிரச்சாரம் செய்யாமல் ஒருவரை ஒருவர் தாக்கி பிரச்சாரம் செய்து கொள்வது இந்தியா கூட்டணியை நம்பகத்தன்மையை யோசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

 
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வலிமையான வேட்பாளரை நிறுத்தியுள்ள நிலையில் இரு கட்சிகளும் அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் வாக்குகளை பெற்று தான் பினராயிவிஜயன் எம்எல்ஏ ஆனார் என்றும் சுதந்திர போராட்டத்தில் இடதுசாரிகள் கலந்து கொள்ளவில்லை என்றும் சுதந்திரம் கிடைத்த போது அதை கருப்பு நாளாக கடைபிடித்தவர் தான் இடதுசாரிகள் என்றும் காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது 
 
மேலும் இடதுசாரிகள் இல்லை என்றால் இந்தியா இல்லை என்ற வாக்கியத்தை கூறுகிறார்கள் ஆனால் அது உண்மை அல்ல என்றும் பினராயி விஜயன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வாக்குகளை பெற்று எம்எல்ஏ ஆன வரலாறு கூட உண்டு என்றும் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது
 
இந்தியா கூட்டணியில் உள்ள இரண்டு முக்கிய கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments