Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தானாக ஓடிய ரயில் என்ஜினை பைக்கில் துரத்திச் சென்று நிறுத்திய ஓட்டுநர்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (18:31 IST)
ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் என்ஜின் ஓட்டுநர் இல்லாமல் ஓடியதை சினிமாவில் வருவது போல் பைக்கில் துரத்திச் சென்று ஓட்டுநர் ஒருவர் நிறுத்தியுள்ளார்.


 

 
கர்நாடக மாநிலம் கல்பர்கி மாவட்டத்தில் வடி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு நேற்று பிற்பகல் சென்னை-மும்பை செல்லும் ரயில் வந்தது. ரயில் நிலைத்தில் எலக்ட்ரிக் என்ஜின் அகற்றப்பட்டு டீசல் என்ஜின் இணைக்கப்பட்டது. 
 
நிறுத்தி வைப்பட்டு இருந்த எலக்ட்ரிக் என்ஜின் தானாக ஓடத்துவங்கியது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரயில்வே அதிகாரிகள், ரயிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர். விபத்து ஏற்படாமல் இருக்க என்ஜின் ஓடிய ரயில் பாதையில் சிக்னல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது. 
 
அடுத்தடுத்து இருந்த ரயில் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ரயில்வே அதிகாரி ஒருவர் சினிமாவில் வருவது ரயில் என்ஜினை பைக்கில் துரத்திச் சென்றார். ஒருவழியாக வேகம் குறைந்தது. இதையடுத்து அவர் என்ஜினை தாவிப்பிடித்து நிறுத்தினார். 
 
ஓட்டுநர் இல்லாமல் ரயில் என்ஜின் 13 கி.மீ தூரம் ஓடியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments