Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டோ எடுத்தால் கைநிறைய பரிசு: உபி முதல்வரின் அடுத்த அதிரடி

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (05:01 IST)
கடந்த சில வருடங்களாக மொபைல் போனின் ஆதிக்கம் அதிகரித்ததில் இருந்து கர்ணனின் கவசகுண்டம் போல அனைவரும் மொபைல் போனை 24 மணி நேரமும் கையில் வைத்துள்ளனர். இது எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் டிரைவிங் செய்யும்போது கூட ஒரு கையில் ஸ்டியரிங், இன்னொரு கையில் மொபைல் போன் என வைத்து கொண்டு பல டிரைவர்கள் பயணிகளின் உயிரை பணயம் வைக்கின்றனர்



 


இந்த நிலையில் சமீபத்தில் பதவியேற்ற உபி மாநில முதல்வர் ஒரு அதிரடி அறிவிப்பை தெரிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் டிரைவர்கள் யாராவது போன் பேசிக்கொண்டே டிரைவிங் செய்வதை போட்டோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இனிமேல் மொபைல்போனை டிரைவிங்கின்போது டிரைவர்கள் பயன்படுத்த அஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது குறித்து உபி அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்வதாந்திரதேவ் சிங் கூறுகையில், பேருந்தை ஓட்டும் போது ஓட்டுனர்கள் செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், யாரும் இதனை கடைபிடிப்பது இல்லை. இந்த விதியை மீறும் ஓட்டுனர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கவே இந்த அதிரடி திட்டம் என்று கூறியுள்ளார்.

மொபைல் போன் பேசிக்கொண்டே டிரைவிங் செய்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட டிரைவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறைதண்டனையும் விதிக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில்பட்டி வந்த சபாநாயகர் அப்பாவுக்கு கறுப்புக்கொடி.. கிராம மக்கள் ஆவேசம்..!

மதுபான வசதியுடன் திருமலை திருப்பதியில் சொகுசு ஓட்டல்.. தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு..!

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பில் கொண்டு வர திட்டம்.. ஒரே நாடு ஒரே கோவில் நிர்வாகமா?

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. நீண்ட சரிவுக்கு பின் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments