Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு..! – காரணம் என்ன?

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (08:55 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் பெட்ரோலுக்கு திடீர் பற்றாக்குறை எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் தனியார் பெட்ரோல் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்டவற்றின் பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் தட்டுப்பாடு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் பங்குகள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகம், இந்தியாவில் தேவையான அளவு பெட்ரோல் கையிருப்பு உள்ளதாகவும், மேற்கண்ட மாநிலங்களில் வழக்கத்தை விட 50% பொதுத்துறை பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும் வீதம் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக சில பங்குகளில் தட்டுபாடு எழுந்துள்ளதாகவும், அவை விரைவில் சரிசெய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments