Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து பெட்ரோல் பூடான் செல்கிறது.. ஆனால் பூடானில் ஒரு லிட்டர் ரூ.64 தான்..!

Mahendran
சனி, 15 பிப்ரவரி 2025 (12:57 IST)
இந்தியாவிலிருந்து தான் பூடான் நாட்டிற்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், பூடான் நாட்டில் இந்தியாவை விட பெட்ரோல் விலை குறைவாக இருப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழ்நாடு உட்பட மற்ற அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட பெட்ரோல் விலை 100 ரூபாய் இருக்கும். சில மாநிலங்களில் மட்டும் 100 ரூபாய்க்கு  ஐந்து அல்லது பத்து ரூபாய் குறைவாக விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானுக்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் அங்கிருந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்று விலையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனை அவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த வீடியோவுக்கு லட்சக் கணக்கில் பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.
 
பூடான் நாட்டின் கரன்சியும் இந்திய கரன்சியும் கிட்டத்தட்ட ஒரே நிலை என்ற நிலையிலும், பூடான் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 64 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. இந்தியாவிலிருந்து பெட்ரோல் வாங்கி, இந்தியாவை விட குறைவான விலையில் பூடான் விற்பனை செய்து வருவதை எடுத்து, பல்வேறு கருத்துக்கள் கமெண்ட்களில் பதிவாகியுள்ளன.
 
இந்தியாவில் பெட்ரோல் விலையை விட அதற்குண்டான வரிகளே அதிகம் என்றும், மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து கிட்டத்தட்ட 50 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரியாக விதிக்கின்றன என்பதால் தான், இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாகவும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments