Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை! பொதுமக்கள் நிம்மதி!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (07:45 IST)
கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வாகன வாடகை உயர்ந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தற்போது குறைந்து வருகிறது இதனால் பெட்ரோல் டீசல் விலையும் இந்தியாவில் குறைக்க வேண்டும். ஆனால் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் அதே விலையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
எப்பொழுது கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் அதன் பயன்பாட்டை பொதுமக்களுக்கு எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசும் அளிப்பதில்லை என்றும் ஒன்று விலையை குறைக்காமல் அதே விலையில் விற்பனை செய்வது அல்லது வரியை ஏற்றுவது என்ற இரண்டை மட்டுமே செய்து வருகிறது என்று பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை விலையில் மாற்றம் இல்லாததை அடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 102.49 என்றும் டீசல் விலை ரூ.94.39 என்றும் விற்பனையாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments