Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.5 லட்சத்திற்கும் மேல் பணத்தை மாற்றுபவர்கள் கவனத்திற்கு.....

2.5 லட்சத்திற்கும் மேல் பணத்தை மாற்றுபவர்கள் கவனத்திற்கு.....

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (12:17 IST)
வங்கி கணக்குகளில், தனது வருமானத்திற்கு அதிகமான பணத்தை செலுத்தினால், அந்த பணத்தின் மதிப்பில் 200 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.


 

 
பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், புதிய 100, 500, 2000 நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள், பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளாலம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் வருமானத்திற்கு அதிகமான பணத்தை வங்கி கணக்களில் செலுத்தினால், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என தகவல் வெளியகியுள்ளது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய வருமான வரித்துறை செயலாளர் “ நவம்பர் 10 முதல் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யப்படும் பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும். அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருக்கும் வங்கி கணக்குகளை மட்டும் எடுக்கப்பட்டு, கணக்கு வைத்திருப்பவர்களின் வருமானத்தோடு ஒப்பிடப்படும். அதன்பின்  அவர்களிடம், வருமான வரியுடன் சேர்த்து 200 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும்” என்று கூறினார்.
 
ஆனால், வங்கிகளில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யும் சிறு வணிகர்கள், இதுபற்றி கவலைப்பட தேவையில்லை” எனவும் அவர் கூறினார். 
 
அதேபோல், நகைகளை வாங்கும் போது, வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக பான் கார்டு எண்ணை  கண்டிப்பாக பெற வேண்டும். தவறினால் அந்த நகைக்கடைக் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
வருமான வரித்துறையின் இந்த அதிரடி அறிவிப்புகள், வருமானத்தை மறைத்து,  சரியாக வரி கட்டாமல் இருக்கும் ஏமாற்று பேர் வழிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவம் போல் பொறியியல் படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு? முதல்வர் முயற்சி..!

ஓடிடி சினிமா, வெப் தொடர்களுக்கு சென்சார்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இன்றிரவு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!

ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: சபாநாயகருக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க. எம்.பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments