Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்து போட்டியிட்டு மண்ணை கவ்விய மெகபூபா கட்சி.. மெகபூபா மகள் பின்னடைவு..!

Mahendran
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (13:01 IST)
ஜம்மு காஷ்மீரில் மெகபூபா கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில் வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி முன்னிலையில் உள்ளது என்பதோடு, அந்த கூட்டணிக்கு 52 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பாஜக கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், தனித்துப் போட்டியிட்ட மெஹபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும், மெஹபூபாவின் மகள் இல்தியா  முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய நிலையில் அவர் பின்னடைவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இது குறித்து, அவர் தனது பக்கத்தில் “மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்; மக்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பு, பாசம் எப்போதும் என்னுடன் இருக்கும். இந்த தேர்தலுக்கு எனக்காக கடுமையாக உழைத்த எனது கட்சியினருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments