ராகுல் காந்தி விவகாரம்: 3 நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (12:06 IST)
ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் இன்று தொடங்கிய மூன்றே நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இது குறித்து விவாதம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறிப்பு விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். 
 
இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய மூன்று நிமிடங்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டுமே மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்... தேடிப்பிடித்து கைது செய்ததால் பரபரப்பு..!

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments