Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டூ ஆர் டை: ஐடி எச்சரிக்கை சொல்வது என்ன?

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (15:39 IST)
இறுதி வாய்ப்பை தவற விட வேண்டாம் என பான் - ஆதார் இணைப்பு குறித்து வருமானவரித்துறை எச்சரிக்கை.  
 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. 
 
பிறகு பல்வேறு காரணங்களால் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 31க்குள் இணைக்க வேண்டும் என்ற கால அவகாசம் டிசம்பர் 31 ஆக நீட்டிக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் ஒரு வாய்ப்பாக 2020 மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசம் வழங்கியது மத்திய நிதி அமைச்சகம். 
 
இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் (மார்ச் 31,2020) பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்க வருமான வரித்துறை தெரிவித்தது. மேலும், பான் கார்டுகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தது.  
 
இதனிடையே மார்ச் 31-க்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருப்பதால், இறுதி வாய்ப்பை தவறவிட வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரித்துள்ளது. வருமானவரி தாக்கல் செய்ய பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் மத்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து இரண்டையும் இணைக்கும்படி மக்களிடம் வலியுறுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments