Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தாண்டிய பாக். சிறுவன்: இந்திய ராணுவம் செய்த காரியம்...

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (17:33 IST)
பாகிஸ்தான் எல்லையில் இருந்து வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை இந்திய ராணுவ படையினர் பத்திரமாக வழி அனுப்பிய சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 24 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து 11 வயது சிறுவன் வழிதவறி, காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்துவிட்டார். இந்த சிறுவனை பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 
 
காஷ்மீர் போலீஸார் அந்த சிறுவனை கைது செய்யாமல் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர். கடந்த 3 நாட்களாக காஷ்மீர் போலீஸாரிடம் இருந்த சிறுவன் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் முறைப்படி இந்திய ராணுவத்தினர் ஒப்படைத்தனர். 
 
இதில் நெகிழ்ச்சியான சம்பவம் என்னவெனில், சிறுவனை ஒப்படைக்கும் போது, புதிய ஆடைகள், இனிப்புகள், விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து அனுப்பிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments