Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது நாளாக எதிர்கட்சிகள் தர்ணா: சஸ்பெண்ட் நீக்கப்படுமா?

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (11:45 IST)
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு 3வது நாளாக எதிர்கட்சிகள் தர்ணா போராட்டம். 

 
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது என்பதும் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்கட்சிகள் அமளி செய்து வருவதால் நாடாளுமன்ற வளாகம் பெரும் பரபரப்பில் உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
ஆனால் மன்னிப்பு கேட்டால் மட்டுமே சஸ்பென்ட் ரத்து செய்யப்படும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 3வது நாளாக காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள், சிவசேனா கட்சி 2 பேர், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments