Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டம்

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (14:17 IST)
அதானி விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டம்
அதானி விவகாரம் குறித்து கூட்டு குழு விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சி எம்பிகள் நாடாளுமன்றத்தின் முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் வரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிகள் அமளி செய்து வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து பாரத ராஷ்டிரிய சமிதி, ஆம் ஆத்மி உள்பட ஒரு சில கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
மேலும் எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments