Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா..

Arun Prasath
திங்கள், 2 மார்ச் 2020 (20:20 IST)
இந்தியாவில் ஏற்கனவே இராண்டு பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. 

சீனாவில் நேற்று 42 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது முந்திய அனுதினமும் உயிரிழப்பவர்களின் விகிதத்தை விட குறைவானதாகும். சீனாவில் உயிரிழப்பு விகிதங்கள் குறைந்தாலும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. 

உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில், இத்தாலியிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இத்தாலியிலிருந்து ஜெய்ப்பூர் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments