Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓகி புயல்: சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (10:58 IST)
ஓகி புயல் தீவரம் அடைந்து வருவதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவு பயணத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் இருந்து  லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி-கேரள கடல் எல்லைப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஓகி புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்க சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படியும் குறிப்பாக மலைப்பாதைகள் மற்றும் காடுகள் வழியாக செல்லும் பக்தர்கள் கட்டாயம் இரவு நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments