Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாய்-பிரண்ட் இல்லாத மாணவிகளுக்கு அனுமதி இல்லை.. கல்லூரி முதல்வரின் அதிர்ச்சி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (16:39 IST)
பாய்-பிரண்ட் இல்லாத மாணவிகளுக்கு அனுமதி இல்லை.. கல்லூரி முதல்வரின் அதிர்ச்சி அறிவிப்பு
வரும் பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவியும் குறைந்தது ஒரு பாய் பிரண்டை வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கல்லூரியில் அனுமதி இல்லை என்றும் கல்லூரி முதல்வரே நோட்டீஸ் ஒட்டியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தில் உள்ள எஸ்விஎம் என்ற தனியார் கல்லூரியில் முதல்வரின் கையெழுத்திட்டு ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு நுழையும் போது குறைந்தது ஒரு பாய் ஃபிரண்ட் உடன் இருக்க வேண்டும், இல்லை என்றால் அவர்களுக்கு கல்லூரியில் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த நோட்டீஸ் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தன்னுடைய கையெழுத்தை யாரோ தவறாக பயன்படுத்தி இதுபோன்ற போலியான நோட்டீசை ஒட்டி உள்ளனர் என்று கல்லூரி முதல்வர் கூறினார். மேலும் இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments