Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித உயிரைவிட முக்கியமானது எதுவும் கிடையாது: விவசாயி தற்கொலை குறித்து பிரதமர் மோடி பேச்சு!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2015 (15:50 IST)
விவசாயி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தனது வேதனையை வெளிப்படுத்திய நரேந்திர மோடி, மனித உயிரைவிட முக்கியமானது எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 

 
ஆம் ஆத்மி பேரணியில் நேற்று ராஜஸ்தானை சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக இன்று மக்களவையில் உறுப்பினர்கள் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினர்.
 
தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
 
“நேற்றைய சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள உறுப்பினர்களும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அந்த சம்பவம் எனக்கும் மிகுந்த வேதனையை அளிக்கிறது.
 
மனித உயிரை விட எதுவும் பெரிதல்ல. விவசாயிகள் தற்கொலை என்பது பல ஆண்டுகளாக  இருக்கும் பிரச்சனை இதற்கு தீர்வு காண அரசு முயன்று வருகிறது. உங்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் ஏற்க அரசு தயாராக உள்ளது. நாட்டின் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாங்கள் விவசாயிகளை உயிரிழக்க விடமாட்டோம்” இவ்வாறு அவர் கூறினார்.
 
முன்னதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு துணை நிற்கும் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” என்றார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments