Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்காக வாரணாசி தொகுதியை விட்டுக்கொடுத்ததில் எந்த வருத்தமும் இல்லை - முரளி மனோகர் ஜோஷி

Webdunia
திங்கள், 12 மே 2014 (15:43 IST)
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி போட்டியிடுவதாக இருந்த வாரணாசி தொகுதியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக விட்டுக்கொடுத்ததில் வருத்தம் எதுவும் இல்லை என்று முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
Murali Manohar Joshi
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, "பாஜக தலைமையிலான கூட்டணிக்கு நாட்டில் பெரும் அலை வீசுகிறது. வெற்றியை தாண்டிய அதிக பெரும்பான்மை கிடைக்கப் போவது உறுதியாகி விட்டது" என்றார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அமைச்சரவையில் இடம் பெறுவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க ஜோஷி மறுத்துவிட்டார்.
 
மேலும் அவர் கூறுகையில், வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடுவதாக இருந்த வாரணாசி தொகுதியை பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்காக விட்டுக்கொடுத்து கான்பூரில் போட்டியிடுவதில் வருத்தம் எதுவும் இல்லை” என்றார்.
 
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் போட்டியிடுவதாக முடிவான செய்திகளை அடுத்து, அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யும், பா.ஜ.க. மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments