Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தறோம்..! – உலக நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு!

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (09:22 IST)
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.

ALSO READ: உயிரே போனாலும் பாஜகவோடு கூட்டணி இல்ல..!? – நிதிஷ்குமார் உறுதி!

இந்த தீபாவளி முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 5ஜி சேவைக்கான தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவுப்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்துவிடும். முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 5ஜியை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ளோம். இந்தியாவின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments