Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.16000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

Webdunia
வியாழன், 14 மே 2020 (17:14 IST)
நேற்று முன் தினம்  ரூ. 20 லட்சம் கோடி அளவிலான திட்டங்களை பிரமதர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும்போது தெரிவித்தார். இதையடுத்து, நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதா ராமன், முக்கியமான திட்டங்களை அறிவித்தார். இதற்குப் பல பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் இன்று இரண்டாவது முறையாக சில முக்கிய  திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார்.

அதில், நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.16000 கோடி ஒதுக்கீடு,  ஊரக கிராமப் புற வங்கிகளுக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.29,000 கோடி கடனுதவி அளிக்கப்படும்.
நகர்ப்புற ஏழைகள் புலம்பெயர் ஊழியர்களுக்காக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு அமைப்புசாரா ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம்.

நூறு நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் 14.62 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சொந்த ஊர் திரும்பும் புலம்பெயரும் ஊழியர்களுக்கு 110 நாள் திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

12 ஆயிரம்  சுய உதவிக்குழுக்கள் மூலம் இதுவரை 3 கோடி முகக் கவசங்களும், 1.2.லட்சம் லிட்டர் சானிடைசர்  தயாரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த 2 மாதங்களில் சுமார் 7,200 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments