Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா குற்றவாளிகள் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு..

Arun Prasath
திங்கள், 2 மார்ச் 2020 (17:43 IST)
நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்த நிலையில், தற்போது தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, குற்றம் புரிந்தபோது தனக்கு 16 வயது என்பதால் சிறார் தண்டனை சட்டத்தின் வழக்கின் கீழ் தன்னை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இவரது மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கனவே மார்ச் 3 ஆம் தேதி 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு இடப்பட்டது.

இதனையடுத்து பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் இன்று மதியம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியின் மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கான தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை என உத்தரவிட்ட பிறகு இது மூன்றாவது முறையாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments