Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா.. பூஜையுடன் தொடங்கியது..!

Webdunia
ஞாயிறு, 28 மே 2023 (07:52 IST)
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா சற்றுமுன் பூஜையுடன் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா சற்று முன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில்  பிரதமர் மோடி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் 
 
தருமபுரி ஆதினத்தால் கொண்டுவரப்பட்ட செங்கோல் இந்த பூஜையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 970 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்திற்கு சென்ட்ரல் விஸ்டா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று காலை7.30 மணிக்கு தொடங்கி உள்ள இந்த பூஜை இன்னும் சில மணி நேரம் நடைபெறும் என்றும் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிகள் இன்று 7.30 மணி முதல் 2 30 மணி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா கட்டிட திறப்பு விழாவை நினைவு கூறும் வகையில் 75 ரூபாய் நாணயமும் இன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முன்னதாக பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா பூஜைகள் கலந்து கொள்வதற்கு முன் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments