Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி…’’வலுவடையும் விவசாயிகளின் ’’டெல்லி சலோ போராட்டம்’’

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (17:14 IST)
டெல்லியில் தொடர்ந்து 35  வது நாளாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகள். இந்நிலையில் டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும்  விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியும், கடும் குளிரிலும் வெயிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகத் தகவல் வெளியாகிறது.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி சலோ என்ற பெயரில் தொடர்ந்து 35 வது நாளாக டெல்லியில் உள்ள முக்கிய சாலையை மறித்து உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும்  விவசாயிகள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தித், தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று  மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளுக்கும் வேளாண் சட்டங்கள் குறித்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
எக்காரணம் கொண்டும் இச்சட்டங்களை திரும்பப் பெற மாட்டோமென மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2: கணினி வழி தேர்வு ரத்து: ஓ.எம்.ஆர் முறையில் தேர்வு நடத்த திட்டம்..!

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை..!

அஜர்பைஜான் விமானத்தை தாக்கியது ரஷ்ய ஏவுகணையா? - ரஷ்யா அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments