Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறார் - ராகுல் காந்தி

Webdunia
வியாழன், 1 மே 2014 (19:30 IST)
இமாச்சல பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார். 
 
பிளாஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறார்.  அவர் அதானி குழுமத்தினருடன் தொடர்பு வைத்துள்ளார். அந்த குழுமத்திற்கு மட்டும் பிரத்யேக சலுகைகளை நரேந்திர மோடி அளித்துள்ளார் என பேசினார்.
 
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டனி ஆட்சியில் சுமார் 15 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாஜக வாக்காளர்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார்.  
 
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது  குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.. விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு குறித்து ஈபிஎஸ்..!

விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு: முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும்: அண்ணாமலை..

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு: சிகிச்சையில் 93 பேர்..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

Show comments