Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்து கொள்ளும் கோழையல்ல முத்துகிருஷ்ணன். தந்தை உருக்கமான பேட்டி

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (05:01 IST)
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் படித்து வந்த சேலத்தை சேர்ந்த எம்.ஃபில் மாணவர் முத்துக்கிருஷ்ணன் நேற்று மாணவர் விடுதியில் திடீரென தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளது. மாணவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பின்னரே மாணவனின் மரணம் குறித்த விவரங்கள் தெரியவரும்


 


இந்நிலையில் மகன் மறைவுச்செய்தி கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் நேற்று சேலத்தில் இருந்து டெல்லி சென்றனர். அதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் கூறியபோது, ' "முத்துகிருஷ்ணன் நேற்று மாலை வழக்கம் போல தொலைபேசியில் பேசினான். தற்கொலை செய்யும் அளவிற்கு எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவன் கோழையும் கிடையாது' என்று கூறினார். எனவே முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டாரா? என்ற ரீதியில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதே அவரது மறைமுக கோரிக்கையாக உள்ளது.

மரணம் அடைந்த முத்துகிருஷ்ணனுக்கு திருமணமான மூத்த சகோதரி கலைவாணி மற்றும் பள்ளியில் படித்து வரும் தங்கைகள் ஜெயந்தி, சுதா ஆகியோர் உள்ளனர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை வெறும் 700 ரூபாய்க்கு விற்பனை செய்த இளம்பெண்.. என்ன காரணம்?

நெல்லை மாவட்டத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments