Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சம்: சென்செக்ஸ் 50 ஆயிரத்தை நெருங்குகிறது

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (11:06 IST)
கடந்த சில நாட்களாகவே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 50 ஆயிரத்தை நெருங்கி  வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
அமெரிக்க அதிபராக ஜோபைடன் தேர்வு செய்யப்பட்டது மற்றும் உலகமெங்கும் பொருளாதாரம் மீண்டு வருவது ஆகியவை காரணமாக பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது 
 
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை தொடங்கியபோதே 49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சென்செக்ஸ் புதிய உச்சம் பெற்றுள்ளது. மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 49,265 என்ற அளவில் தற்போது வர்த்தகம் நடந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 483 புள்ளிகள் அதிகரித்து உள்ளது என்பதும் 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரத்து 475 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பலமடங்கு லாபம் பெற்று உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதை பலரும் லாபத்தை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments