Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை முழு ஊரடங்கிற்கு கைமேல் பலன்: கடந்த 25 நாட்களில் நேற்று பாதிப்பு குறைவு

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (13:59 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்து வந்தது என்பதும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் சுமார் பத்தாயிரம் பேர் வரை தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மும்பை உள்பட மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு இருந்தாலும் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கடந்த இருபத்தைந்து நாட்களில் மும்பையில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதாக தெரிகிறது 
 
நேற்று மும்பையில் 5888 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த மார்ச் 30 ஆம் தேதிக்கு பின் நேற்றுதான் குறைவான பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் படிப்படியாக கொரோனா வைரஸ் குறையும் வாய்ப்பு இருப்பதால் முழு ஊரடங்கு மேலும் நீடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

நான் திமுகவின் ஸ்லீப்பர்செல்லா? ராஜ்யசபா சீட் கேட்டதால் வந்த வினை..! - மல்லை சத்யா வேதனை!

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டி ரூ.11 லட்சம் மோசடி.. விரக்தியில் ஐடி ஊழியர் தற்கொலை..!

எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி!? விஜய்யுடன் கூட்டணி? - ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0!?

அடுத்த கட்டுரையில்
Show comments