Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டி ; பின்னாலேயே ஓடிய தாய் பசு : நெகிழ்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (14:04 IST)
தனது கன்று நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட போது, அந்த கன்றுக்குட்டியின் தாய் பசு, வண்டியின் பின்னாலேயே ஓடிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

 
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு விவசாயி பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அந்த பசுமாடு கன்றுக்குட்டி ஈன்றது.  அந்த கன்றுக்குட்டிக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டு நோய்வாய்ப்பட்டது. எனவே, கடந்த 25ம் தேதி அதன் உரிமையாளர் ஒருவாகனத்தில் அதை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
 
அப்போது, கன்றுக்குட்டியின் தாய் பசு அந்த வாகனத்தின் பின்னாலேயே மூச்சிரைக்க ஓடிவந்தது. மருத்துவமனை அமைந்துள்ள அரை கிலோ மீட்டர் தூரம் வரை அந்த பசு ஓடி வந்தது. கால்நடை மருத்துவர்கள் அந்த கன்றுக்குட்டிக்கு கடந்த 28ம் தேதி வரை சிகிச்சை அளித்தனர். அதுவரை தாய் பசு அந்த அமருத்துவமனை வாசலிலேயே நின்று கொண்டிருந்ததாம்.
 
தன்னுடைய கன்றுக்காக பாசப் போராட்டம் நடத்திய அந்த பசுவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவை வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments