Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலைய குடியிருப்பில் 100 க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் கண்டெடுப்பு

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2015 (15:09 IST)
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள் குவியல் குவியலாக 100 க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள உன்னாவோ காவல் நிலைய ஊழியர்களின் குடியிருப்புக்கு அருகில் உள்ள பூட்டிய அறை ஒன்றில் பிளாஸ்டிக் பைகளில் ஏராளமான மண்டை ஓடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 25 க்கும் மேற்பட்ட பைகளில் 100க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, பல்வேறு விதமான பதில்கள் வருகின்றன. விசாரணை தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த அறை பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இது குறித்து உத்தரப் பிரதேச காவல்துறையினர் கூறுகையில், “மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட அறை முன்னர் மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்தது’’  என்றும் “பிரேத பரிசோதனை முடித்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகள் தான் தற்போது கண்டெடுக்கப் பட்டுள்ளன” என்றும் கூறியுள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments