Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுலை 21: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்

Webdunia
வியாழன், 25 ஜூன் 2015 (00:08 IST)
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்  ஜுலை 21ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர் மே 8ஆம் தேதிக்கு பதிலாக 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மே 13ஆம் தேதி முடிவடைந்தது.
 
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்  ஜுலை 21ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது.
 
மழைக்கால கூட்டத் தொடரில் நிலம் எடுப்பு மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
 
மேலும், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரம், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ராஜினாமா விவகாரம், மத்திய மனித வளதுறை மந்திரி ஸ்மிரிதி இரானி கல்வி சான்றிதழ் விவகாரம் போன்றவற்றை பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்ப தயராகி வருகிறது என கூறப்படுகின்றது.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments