Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதமாக ரகசிய திட்டம் தீட்டிய மோடி குழு

6 மாதமாக ரகசிய திட்டம் தீட்டிய மோடி குழு

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (12:48 IST)
நேற்று இரவு முதல் மக்கள் கையில் இருக்கும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார்.


 

 
மேலும், அந்த நோட்டுகளை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இது தொடர்பான நடவடிக்கைகளை, மத்திய அரசு கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஆகிய 4 பேரும் ரகசியமாக இந்த திட்டம் குறித்து விவாதித்து வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அதாவது அவர்கள் 4 பேருக்கு மட்டுமே இந்த திட்டம் பற்றி தெரியும்.  கடந்த 6 மாதங்களாகவே புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது பற்றி ஆலோசித்து, அந்த வேலையும் முடிக்கப்பட்டது.
 
முதல் கட்டமாக புதிய 100 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அதேபோல் அதிநவீன பாதுகாப்பு தொழில் நுட்பத்துடன் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. 
 
அதன் பிறகுதான் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments