Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் விவகாரம்: ரஷ்ய அதிபருக்கு ஆலோசனை கூறிய பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (07:50 IST)
உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி இதில் தலையிட்டு ரஷ்ய அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. 
 
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்
 
பேச்சுவார்த்தை மற்றும் உரையாடலுக்கு உடனடியாக ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்த பிரதமர் மோடி உக்ரைனில் உள்ள இந்திய மக்கள் குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா பெரும் கவலை தெரிவிப்பதாக அதிபரிடம் பிரதமர் மோடி கூறினார்.
 
மேலும் உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக இந்தியர்கள் வெளியேறுவதற்கும் இந்தியா திரும்புவதற்கும் இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments