Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடிகளில் வாக்குறுதிகள், ஆனால் கிலோக்களில் அல்வா: மோடி சொன்னதும் செய்ததும்!!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (14:35 IST)
கடந்த பொது தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி மக்களை கவர பல பெரிய அறிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் சொன்னது என்ன? செய்தது என்னவென பார்க்கலாம்.


 
 
பீகார்: 
 
பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி, பீகார்  மாநிலத்தின் மேம்பாட்டுக்காக ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி அறிவித்தார். 
 
ஆனால் ஆட்சிக்கு வந்தும், அறிவிப்பை வெளியிட்டு 18 மாதங்கள் ஆகியும் அந்த மாநிலத்துக்கு சில்லறை காசுகள் கூட கொடுக்கப்படவில்லை.
 
ஜம்மு- காஷ்மீர்:
 
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அப்போது வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே, ரூ.80 ஆயிரத்து 68 கோடி வழங்கப் போவதாக பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி  அறிவித்தார்.
 
ஆனால், இந்த அறிவிப்புகள் ஜம்மு- காஷ்மீர் வெள்ளத்தோடு அடித்துக்கொண்டு போய்விட்டது போல், இன்று வரை மோடி அந்த பணத்தை வழங்கவில்லை.
 
இதில் முக்கிய்மான ஒன்று ஜம்மு- காஷ்மீரில் பாரதிய ஜனதா ஆதரவுடன் முஃப்தியின் 'ஜம்மு- காஷ்மீர் மக்கள் முன்னேற்றக் கட்சி'யின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. 
 
சிக்கிம்: 
 
கடந்த 2016 ஜுன் 15 ஆம் தேதி பிரதமர், சிக்கிம் மாநிலத்தில் சுற்றுலா வசதிகளைப் பெருக்கும் நோக்கத்தில் 43,589 கோடி ரூபாய் வழங்கப் போவதாக தெரிவித்தார். 
 
ஆனால், இதுவரை அந்த மாநிலத்துக்கு எந்த பணமும் போய்ச் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சுவிஸ் வங்கி கருப்பு பணம்:
 
பாஜக ஆட்சிக்கு வாந்தால் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணம் மீட்கப்பட்டு, இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்தார்.
 
ஆனால், சுவிஸ் வங்கியில் கோடிகளில் குவிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதற்குப் பதிலாக பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தான் பிரதமர் ஈடுபட்டார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments