Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக மாடல் அழகி புகார்..!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (19:12 IST)
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து யாரோ தன்னை கற்பழித்துவிட்டதாக நடிகையும், மாடல் அழகியுமான பூஜா பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
 
பீகாரைச் சேர்ந்த மாடல் அழகி பூஜா மிஸ்ரா. இவர் பிக் ஸ்விட்ச், பிக் பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வந்துள்ளார். பாலிவுட் படங்கள் சிலவற்றில் குத்தாட்டம் போட்டுள்ளார். ஆனால் சல்மான் கான் நடத்திய ‘பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோ’ மூலம் புகழ்பெற்றார்.
 

 
சமீபத்தில் இவர் காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றிற்காக ராஜஸ்தான் சென்றுள்ளார். அப்போது, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ‘ராடிசன் ப்ளூ’ என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டுள்ளார்.
 
போட்டோ ஷூட் முடிந்த பிறகு அவரை புகைப்படம் எடுத்தப் புகைப்பட கலைஞர் கிளம்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் ஹோட்டலில் தான் குடித்த குளிர் பானத்தில் யாரோ மயக்க மருந்தைக் கலந்து கொடுத்ததாகவும், அதைக் குடித்துவிட்டு அறைக்குச் சென்ற தான் மயங்கிவிட்டதாகவும் பூஜா தெரிவித்துள்ளார்.
 
காலையில் கண் விழித்தபோது தன்னை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துவிட்டது போன்று உணர்ந்ததாகவும், தனது பொருட்கள் திருடப்பட்டுவிட்டதாகவும் அவர் போலிசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!