Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை மதிக்காத லேடி: இது தான் தமிழக அரசுக்கு துணையாக இருப்பதா மரியாதைக்குரிய பிரதமரே!

மோடியை மதிக்காத லேடி: இது தான் தமிழக அரசுக்கு துணையாக இருப்பதா மரியாதைக்குரிய பிரதமரே!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (12:54 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து ஒரு வார காலமாக அறப்போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். இளைஞர்களின் போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளானது.


 
 
அறவழியில் இளைஞர்கள் போராடியதால் அரசும், காவல்துறையும் அவர்களை கலைக்கவோ, தடியடி நடத்தவோ முடியாமல் போனது. இதனால் நாளுக்கு நாள் போராட்டக்கூட்டம் அதிகரித்து லட்சக்கணக்கில் திரண்டியது.
 
இதனால் மிரண்டு போன தமிழக முதல்வர் உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்று பிரதமரை சந்தித்து நிலமையை விளக்கி கூறி அவசர சட்டம் கொண்டு வர வழி செய்தார். முதல்வரை சந்தித்த பிரதமர் மோடி மத்திய அரசு ஏதும் செய்ய முடியாது, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு துணையாக இருக்கும் என வெளிப்படையாக வாக்குறுதி அளித்தார். தமிழக மக்களின் உணர்வுகளையும், கலாச்சாரத்தையும் மதிக்கிறேன் என பிரதமர் குறிப்பிட்டார்.
 
ஆனால் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருக்கும் மேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் தமிழக மக்களுக்கு பகிரங்கமாக உறுதியளித்திருக்கிறார். ஆனால் அவரது அமைச்சரவையில் இருக்கும் முக்கியமான அமைச்சரே ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
 
இது தான் மத்திய அரசு தமிழக அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்பதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரதமர் மோடி அளித்துள்ள வாக்குறுதியை காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு செயல்பட்டுள்ளார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. அவர் தன்னிச்சு செயல்படுகிறாரா? அல்லது பிரதமர் வாக்குறுதியளித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை மேனகா காந்தி மதிப்பதில்லையா? என பல்வேறு மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments