Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை: சதானந்த கவுடா

Webdunia
திங்கள், 4 மே 2015 (13:06 IST)
கர்நாடகா காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.


 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் சதானந்த கவுடா கூறியதாவது:-
 
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சியினர் கீழ்மட்ட அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அணை தொடர்பாக கர்நாடக அனைத்து கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வந்த போது, சரியான புள்ளி விவரங்களுடன் வரவில்லை.
 
இந்த அணை கட்டப்படுவதன் நோக்கம், இந்த திட்டத்தால் எவ்வளவு பேர் பயன் அடைவார்கள் என்பது பற்றி விரிவாக தகவல்களை மத்திய அரசிடம் மாநில அரசு தெரிவிக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர் சித்தராமையாவிடம் கூறியுள்ளேன்.
 
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழகத்திற்கு எந்தவித உரிமையும் இல்லை.
 
இந்த அணையை கட்டி தண்ணீர் சேகரித்து, குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு பயன்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதேப் போல் தமிழகத்தில் தண்ணீர் தேவைப்பட்டால் இந்த அணையில் இருந்து தண்ணீர் வழங்கவும் முடியும்.
 
அதை தமிழ அரசியல் கட்சிகள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அணை விவகாரத்தில் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் அரசியல் செய்யக் கூடாது. இவ்வாறு சதானந்த கவுடா கூறியுள்ளார்.

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

Show comments