Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த அம்மாவுக்கு கண்ணு தெரியல.. எப்படியாவது காப்பாத்த நினைச்சேன்! – நிகழ்வை விவரித்த மயூர்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (10:29 IST)
மும்பையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே பணியாளர் அந்த சில வினாடிகள் குறித்து விவரித்துள்ளார்.

மும்பை சராகத்திற்குட்பட்ட வங்கனி ரயில் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் பார்வையற்ற பெண்ணுடன் சென்ற குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்த நிலையில் ரயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே பாய்ந்து சென்று நொடி பொழுதில் குழந்தையை காப்பாற்றினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் அவருக்கு ரூ.50 ஆயிரம் பணத்தை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து பேசிய மயூர் ஷெல்கே “பார்வையற்ற தாயுடன் சென்ற குழந்தை தண்டவாளத்தில் விழுவதை பார்த்தேன். நான் அவர்களிடமிருந்து 60 மீட்டர் தொலைவில் இருந்தேன். அந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட நினைத்தேன். ஒருவரை காப்பாற்றினேன் என்பதை சில வினாடிகளுக்கு என்னால் உணர முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments