Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு.. அதிரடிப்படை பதில் தாக்குதல்..!

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:21 IST)
ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மாவோயிஸ்டுகள், அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக வ் வெளியாகிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்டுகள் 2 மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், அதிரடி படையினர் மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் இல்லை எனவும் ஒரு கட்டத்தில் வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் தப்பியோடி விட்டதாகவும் தெரிகிறது. தப்பியோடிய மாவோயிஸ்டுகளை கம்பமலை பகுதியில் அதிரடிப் படையினர் தேடி வருகின்றனர்.
 
இதே பகுதியில், தேர்தலுக்கு 2 நாள் முன்பாக வாக்களிக்க வேண்டாம் என துப்பாக்கியுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments