Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் கள்ளக்காதலனை ஆத்திரத்தில் 20 முறை குத்திக் கொன்ற கணவன்

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (17:04 IST)
தனது மனைவியின் கள்ளக்காதலனை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

புதுடெல்லியின் மேற்கு பகுதியில் நிஹால் விஹார் பகுதியில் வசித்து வருபவர் கபீர் (28). இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஷு தொழிற்சாலையில் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மேலதிகாரியாக நரேஷ் தாஸ் (26) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இதனால், கபீரின் மனைவிக்கும், நரேஷுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் தொடர்ந்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தொலைபேசி வழியாக உரையாடி வந்துள்ளனர்.

இதனை அறிந்த கபீர் தனது மனைவியை கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், அவரது மனைவி தொடர்ந்து நரேஷுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும், கபீர் வீட்டில் இல்லாத சமயங்களில் நரேஷ் அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இது தகவல் கபீருக்கு தெரியவந்ததை அடுத்து தனது மனைவிக்கு தெரியமால் அவரது போனுக்கு வரும் அழைப்புகளை பதிவு செய்து, அதை மனைவிக்கு தெரியாமல் போட்டு கேட்டுள்ளார். இதில், இருவரும் மிக நெருக்கமாகவும், ஆபாசமாகவும் பேசிக் கொண்டது பதிவாகி உள்ளது.

இதனால், தாங்காத மன ஆளான கபீர், நரேஷை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். இதற்காக புதிய கத்தி ஒன்றை வாங்கிய கபீர், நரேஷிடம் சகஜமாக பேசி அவரை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் இருவரின் கள்ளக்காதல் தொடர்பாக நரேஷிடம் கபீர் பேசியுள்ளார். இதனால், செய்வதறியாது திகைத்த நரேஷ் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், அவரை மடக்கிப் பிடித்த கபீர் 20 இடங்களில் கண்மூடித்தனமாக குத்தி கொலை செய்துள்ளார். இந்நிலையில், கொலை செய்த கபீரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments