Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊருக்கு 200 கிமீ நடந்தே சென்ற தொழிலாளி வழியிலேயே மரணம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (18:15 IST)
200 கிமீ நடந்தே சென்ற தொழிலாளி வழியிலேயே மரணம்
கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அனைத்து வகை போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால், டெல்லியில் உள்ள பல நிறுவனங்களில் அண்டை மாநிலங்களில் மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாக வந்தவர்கள் கூட்டம் கூட்டமாக நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்
 
இந்த நிலையில் தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்திற்கு 200 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற தொழிலாளி ஒருவர் பாதி வழியிலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் உணவு டெலிவரி செய்யும் பணியை செய்து வந்தவர் ரன்வீர்சிங். இவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லியில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார் 
 
இந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சுருண்டு விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 35 வயதேயான ரன்விர்சிங்கிற்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments