Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிருப்தி பாஜக தலைவர்களுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: திட்டம் என்ன?

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (09:55 IST)
பாஜகவுக்கு எதிரான கட்சி தலைவர்களை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பாஜகவில் உள்ள அதிருப்தி தலைவர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பாஜக அதிருப்தி தலைவர்களை இன்று மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோர் கட்சியில் இருந்து விலகி தனி அணி அமைத்து மம்தா பானர்ஜி தலைமையிலான மூன்றாவது அணிக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகள், தலைவர்களை ஒரே அணியில் இணைப்பதில் கடந்த சில மாதங்களாக மம்தா பானர்ஜி மற்றும் சந்திரசேகரராவ் ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாவது அணியை வலுப்படுத்த இன்னும் பல்வேறு கட்சி தலைவர்களுடன் மம்தா பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments