Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது மகாராஷ்டிரா மாநில அரசு: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 23 மே 2022 (07:00 IST)
பெட்ரோல் டீசலுக்கான வரிகளை ஏற்கனவே மூன்று மாநிலங்கள் குறைத்துள்ள நிலையில் தற்போது நான்காவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலமும் வரியை குறைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
மத்திய அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலை 8 ரூபாயும் டீசல் விலை 6 ரூபாயும் குறைந்தது
 
மத்திய அரசை அடுத்து ராஜஸ்தான், கேரளா மற்றும் ஒரிசா ஆகிய மூன்று மாநிலங்களும் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது என்பதும் இந்த மூன்று மாநிலங்களும் பாஜக இல்லாத கட்சிதான் ஆட்சி அமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நான்காவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது. இந்த மாநிலத்திலும் பாஜக அல்லாத கட்சி தன் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து தமிழகமும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!

ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

யார் அந்த சார்? அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த போஸ்டர்.. பெரும் பரபரப்பு

பாமகவில் உறுப்பினர் தவிர்த்து அனைத்துப் பொறுப்புகளையும் துறந்த முகுந்தன்!

அடுத்த கட்டுரையில்
Show comments