Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (14:11 IST)
மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என மஹாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

 
திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அவரது உடல் என்பார்மிங் செய்யப்பட்டு நேற்று இரவு 10 மணி அளவில் அவரின் உடல் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.  
 
அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 2 மணிக்கு தொடங்கப்பட்டு, மாலை 3.30 மணியளவில் அவரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. தற்போது அவரின் உடலுக்கு தமிழ், பாலிவுட் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை செலுத்த மஹாராஷ்டிரா அனுமதி அளித்துள்ளது. எனவே, ஸ்ரீதேவியின் உடலில் மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள்  முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்