Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்தவருக்கு பதவி கொடுத்த காங்கிரஸ்: நெட்டிசன்கள் கிண்டல்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:17 IST)
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஒருவருக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகம் பதவி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் ஹர்ஷித் சிங்காய் என்பவர் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்த நிலையில் இளைஞர் அணி பொதுச் செயலாளராக பாஜகவில் இணைந்த  ஹர்ஷித் சிங்காய்  அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்தது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த பதவிக்கு  ஹர்ஷித் சிங்காய்  விண்ணப்பம் செய்திருந்ததாகவும் இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகம் அந்த மனுவை பரிசீலனை செய்து அவருக்கு அந்த பதவியை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இதில் இருந்து காங்கிரஸ் கட்சிகள் யார் இருக்கிறார்கள்? கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது கூட தெரியாத நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என  ஹர்ஷித் சிங்காய் விமர்சனம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதனையடுத்து காங்கிரசின் இந்த செயலை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments