Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவைத் தலைவருக்கு ரூ. 48.25 லட்சம் சொகுசு கார்

Webdunia
சனி, 28 மே 2016 (06:56 IST)
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் பயன்பாட்டுக்காக ரூ. 48.25 லட்சம் மதிப்புள்ள புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் பயன்பாட்டுக்காக ரூ. 48.25 லட்சம் மதிப்புள்ள புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி, அவரது பயன்பாட்டுக்காக இதுவரை உபயோகப்படுத்தப்பட்டு வந்த "டொயாட்டா கேம்ரி' உயர் ரக சொகுசு காருக்கு பதிலாக "ஜாக்குவார் எக்ஸ்இ போர்ட்ஃபோலியோ' ரக கார் வாங்க மக்களவைச் செயலகம் அனுமதி அளித்தது.
 
இதையடுத்து, தில்லியில் உள்ள "ஜாக்குவார்' ரக கார் விற்பனையாளரான ஏஎம்பி மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ரூ.48,25,661 மதிப்புடைய காரை வாங்க மக்களவைச் செயலகம் கடந்த 23-ஆம் தேதி ஒப்புதல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, அந்த காரை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் கார் விற்பனை நிறுவன பிரதிநிதிகள் அண்மையில் அளித்துள்ளனர்.


 
இது குறித்து மக்களவைச் செயலக வட்டாரங்கள் மேலும் கூறுகையில், சுமித்ரா மகாஜனுக்காக புதிய கார் வாங்க முடிவெடுத்த போது, பிஎம்டபிள்யு, ஜாக்குவார் ஆகிய ரகங்களின் கார்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த இரண்டு ரகங்களில் ஜாக்குவார் ரக கார் சற்று விலை குறைவாக இருந்ததால் அதை வாங்க தீர்மானிக்கப்பட்டது, என்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments