Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. 2 மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (09:17 IST)
வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் இரண்டு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

வங்க கடலில் அவ்வப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி தாழ்வு மண்டலமாக மாறி புயலாகவும் மாறி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்கண்ட் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்பதை உறுதி செய்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்பு என அறிவித்துள்ளது

இதனால் மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது .  மேலும் கேரள மாநிலத்திலும் இன்று ஒரு சில இடங்களில் 7 முதல் 12 சென்டிமீட்டர் வரையிலான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இதனால் கேரள மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 7 நாட்களுக்கு கனமழை..!

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments