Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ரன்னுக்கு ஆல் அவுட்: 754 ரன் வித்தியாசத்தில் வெற்றி! என்னங்கடா இது?

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (20:39 IST)
மும்பையில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தில் 754 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு பள்ளி வெற்றியடைந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற ஹரீஷ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் சுவாமி விவேகானந்தா பன்னாட்டு பள்ளியும், சில்ரன் வெல்ஃபேர் பள்ளியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விவேகானந்தா பள்ளி அணி 39 ஓவர்களில் 761 ரன்கள் எடுத்தது.

இரண்டாவதாக விளையாடிய சில்ரன் வெல்ஃபேர் அணி மோசமாக ஆடியதால் 6 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 7 ரன்கள் மட்டுமே பெற்றது. இதனால் விவேகானந்தா பள்ளி அணி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விவேகானந்தா அணி சிறப்பாக விளையாடிய போதும், சில்ரன் வெல்ஃபேர் அணி கிரிக்கெட்டில் பெரிய அணிகளோடு மோதி பழக்கமில்லாததால் அதிக ரன்கள் எடுக்க விட்டுவிட்டதாகவும், சரியாக ஸ்கோர் செய்ய முடியாததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments