Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளில் 197 கோடி வசூல்! – கல்லா கட்டும் மதுக்கடைகள்!

Webdunia
புதன், 6 மே 2020 (08:24 IST)
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோடி கணக்கில் மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது.

மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கூட்டம் குவிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வந்தனர். இந்நிலையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் முன்பு மது பிரியர்கள் கூட்டமாய் குவிவதால் சமூக இடைவெளியை பேணுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முந்தினம் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனையான நிலையில் நேற்றும் நல்ல விற்பனையை கண்டுள்ளது. “இந்திய தயாரிப்பு மதுபானங்கள் 36.37 லட்சம் லிட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு ரூ.182 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல இந்திய தயாரிப்பு பீர் வகைகள்7 லட்சம் லிட்டர்கள் ரூ.15 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது” என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் இரண்டாவது நாளில் 197 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments