Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரிடம் கேள்வி எழுப்பும் முன்னணி நடிகைகள்....

Webdunia
புதன், 19 மே 2021 (20:16 IST)
கடந்த ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயலாற்றி விருது பெற்ற ஷைலஜாவை இம்முறை ஏன் அமைச்சராக்கவில்லை என கேரள மாநில் நடிகைகள் பலரும் முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் கேரளாவில் தற்போது ஆளும் இடதுசாரி சிபிஐஎம் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளது.

கேரளாவின் வரலாற்றிலேயே எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை. இந்நிலையில் புதிதாக பதவி ஏற்க உள்ளதால் தனது பழைய  அமைச்சரவையைக் கலைக்க வேண்டி தன்னுடைய முதல்வர் பதவியை சமீபத்தில்  ராஜினாமா பினராயி விஜயன்.

இந்நிலையில், வரும் மே 20 ஆம் தேதி பினராஜி விஜயன் கேரள முதல்வராகப் பதவியேற்க உள்ளார். அவருடம் 21 அமைச்சர்கள் பதவி ஏற்க வுள்ளனர். மேலும், இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, சுமார் 500 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகிறது.

கொரொனா காலத்தில் முதல்வர் பினராஜி விஜயன் சிறப்பாகச் செயல்பட்டதாக பலரும் அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேரள மாநில அமைச்சரவையில் முதல்வர் பினராயி விஜயனைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள் என தகவல்கள் வெளியாகிறது.

மேலும், மொத்தம் உள்ள அமைச்சர்களில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 அமைச்சர்களும், அதன் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 அமைச்சர்களும், , மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் , கேரள காங்கிரஸ்( எம்) ஆகிய கட்சிகளுக்கு  தலா ஒரு அமைச்சர் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.  21 அமைச்சர்களுக்கு மேல் இடம் கொடுக்க முடியாது என்பதால் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுக்கு  சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயலாற்றி விருது பெற்ற ஷலஜாவை இம்முறை ஏன் அமைச்சராக்கவில்லை என கேரள மாநில் நடிகைகள் பலரும் முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

குறிப்பாக சமூக வலைதளங்களில் பெண்கள் அமைப்பினர் #Bringbackshailajateacher என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

அடிப்படையில் பள்ளி ஆசிரியையான ஷைலஜா சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 140 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்ட உறுப்பினர்களைவிட அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற அவருக்கே அமைசரவையில் இடமில்லை என நடிகை பார்வதி மேனன், அனுபமா பரமேற்வரன், உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய  வீணா ஜார்ஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments