Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரீபியன் தீவின் குடியுரிமையை பெற லலித் மோடி முயற்சி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2016 (22:10 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லலித் மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் கரீபியன் தீவின் குடியுரிமையை பெற முயற்சித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
இந்தியாவில் ஐ.பி.எல் எனும் கிரிக்கெட் தொடரை லலித்மோடிதான் அறிமுகப்படுத்தினார். ஆனால், அந்த தொடரில் அவர் பண மோசடி செய்தார் என்ற புகார் எழுந்தது. இதையடுத்து அவர் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்று விட்டார்.
 
அவர் தற்போது கரீபியன் தீவிகளில் ஒன்றான செயின்ட் லூசியாவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். செயின்ட் லூசியா வரிச்சலுகையை வாரி வழங்கும் இடங்களில் ஒன்று. எனவே இந்த தீவில் நிரந்தரமாக குடியேற லலித் மோடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
ஆனால், லலித் மோடியின் நன்னடத்தை பற்றி, லூசியா அரசு, இந்தியாவிடம் கேட்கும் பட்சத்தில் அவருக்கு குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே, சென்ற ஆண்டு லலித் மோடி லண்டனில் இருந்து ஐரோப்பா செல்வதற்கான விசா பெறுவதற்கு, இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவி செய்தார். அந்த விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சுஷ்மாவின் செயலுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசால் தேடப்படும் குற்றவாளிக்கு மத்திய மந்திரி சிபாரிசு செய்தது, பாரளுமன்றத்தை முடக்கும் அளவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments